உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் /  முதியவர், சவுண்ட் சர்வீஸ் உரிமையாளருக்கு ரூ.6 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி நோட்டீஸ்

 முதியவர், சவுண்ட் சர்வீஸ் உரிமையாளருக்கு ரூ.6 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி நோட்டீஸ்

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் மளிகை தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், 66. இவரது மனைவி உயிரிழந்த நிலையில், இவரது மனைவியின் பென்ஷன் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் வராததால், வங்கிக்கு சென்று கேட்டபோது, வங்கி அதிகாரிகள், 'நீங்கள், 1.14 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். அதனால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு, ஜி.எஸ்.டி., அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், ஜி.எஸ்.டி., பாக்கி தொகையை செலுத்தும்படி கூறப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த வேலாயுதம், ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல, வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 57, சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன், வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது, அதில், 'சென்னையில், 'ராம் டிரேடர்ஸ்' என்ற நிறுவனம் நடத்தி, 5 கோடி ரூபாய் ராமமூர்த்தி ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்துள்ளார். அதை உடனடியாக செலுத்த வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, 'வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில், மட்டுமே நான் கணக்கு வைத்துள்ளேன். இது வரை சென்னையை பார்த்ததே இல்லை. என் ஆவணங்களை வைத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நேற்று, வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை