உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மின்கசிவால் பண்ணையில் தீ: கருகிய 3,200 கோழிக்குஞ்சுகள்

மின்கசிவால் பண்ணையில் தீ: கருகிய 3,200 கோழிக்குஞ்சுகள்

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, மின்கசிவால் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 3,200 கோழிக்குஞ்சுகள் கருகின. திருப்பத்துார் மாவட்டம், சின்ன மோட்டூர் அடுத்த நாட்டார் வட்டத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 58; இவர் சொந்தமாக, பிராய்லர் கோழி பண்ணை நடத்தி வருகிறார். கடந்த, 7 ம் தேதி, 3,200 கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்து, கோழிப்பண்ணையில் வளர்த்து வந்தார். நேற்று, மின் கசிவால், கோழிப்பண்ணையில் தீ பிடித்தது. நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், 3,200 கோழி குஞ்சுகள் மற்றும் பண்ணை முழுவதும் எரிந்து நாசமாயின. அம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை