உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ஏலகிரி மலையில் அனுமதியின்றி இறங்கிய ஹெலிகாப்டர்

ஏலகிரி மலையில் அனுமதியின்றி இறங்கிய ஹெலிகாப்டர்

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் போலீசாரின் அனுமதியின்றி ‍‍ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையிலுள்ள டான்போஸ்கோ கல்லுாரி மைதானத்தில், நேற்று மாலை திடீரென ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. போலீசார் மற்றும் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். போலீசார் விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ரத்னா ஜெயின், 50, தன் மகனுக்கு ஏலகிரி மலையில் திருமணம் நடத்தினார். இவர், தன் மகன் மற்றும் மருமகளை, பெங்களூருவுக்கு, ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்ல வாடகை ஹெலிகாப்டரை, ஏலகிரிமலையிலுள்ள டான்போஸ்கோ கல்லுாரி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் தரையிறக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அனுமதியின்றி ஹேலிகாப்டரை இறக்க அனுமதிக்ககூடாது. போலீசாரிடம் கல்லுாரி நிர்வாகம் அனுமதி பெற்றிருக்கு வேண்டும். இனிமேல் இதுபோன்று நடக்க அனுமதிக்கக்கூடாது என, கல்லுாரி முதல்வர் போஸ்கோ அகஸ்டியனிடம், எச்சரித்தனர். மேலும், இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது எனவும், கல்லுாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ