உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / 8 அடி நீள மலைப்பாம்பை கொன்று எரித்த வாலிபர் கைது

8 அடி நீள மலைப்பாம்பை கொன்று எரித்த வாலிபர் கைது

ஆம்பூர் : ஆம்பூர் அருகே, 8 அடி நீள மலைபாம்பை எரித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்சர்அலி; இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், கடந்த, 2 நாட்களுக்கு முன்பு, 8 அடி நீள மலைபாம்பு எரிந்த நிலையில் இறந்து கிடந்தது. பஞ்., தலைவர் ஷோபனா, வி.ஏ.ஓ., சந்தோஷ் ஆகியோர், மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, உதவி வன பாதுகாவலர் ராதாகிருஷ்ணன், ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டதில், மலைப்பாம்பை அடித்துக் கொன்று, தீ வைத்து எரித்தவர், சின்னவரிக்கம் ரகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கணேஷ், 28, என தெரியவந்தது. இதையடுத்து அவரை, வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்