உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லாததால் கேள்விக்குறியாகும் மாணவர் பாதுகாப்பு

தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லாததால் கேள்விக்குறியாகும் மாணவர் பாதுகாப்பு

திருப்பூர் : அனைத்து கல்விக்கூடங்களிலும் தீத்தடுப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. தனியார் பள்ளிகள் இவற்றில் அக்கறை காட்டினாலும், பெரும்பாலான அரசு பள்ளிகளில் தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லாத நிலையே உள்ளது.பள்ளிகளில் உள்ள ஆய்வுக்கூடங்களில் மின்சாதன பொருட்கள், எரிவாயு அடுப்புகளை மாணவ, மாணவியர் பயன்படுத்துகின்றனர். மின்கசிவு, எரிவாயு கசிவு உள்ளிட்ட காரணங்களால் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய தருணங்களில், அவர்களின் பாதுகாப்புக்காக அனைத்து பள்ளிகளிலும் தீத்தடுப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீயணைப்புத்துறை மூலம் பள்ளிகளில் தீ விபத்துகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பூரில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் தீயணைப்பான், வாளியில் தண்ணீர், மணல் உள்ளிட்ட தீத்தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகளுக்கே திண்டாடும் அரசு பள்ளிகளிலோ, தீத்தடுப்பு கருவிகள் அமைப்பதில் அக்கறை காட்டாமல் உள்ளனர்.மின்கசிவு தீயை அணைக்க டி.சி.பி., ரக தீயணைப்பான்; எரிவாயு தீயை அணைக்க ஞிணி2 ரக தீயணைப்பான் என விபத்துக்கு ஏற்ற தீயணைப்பான்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்தியே தீயை அணைக்க வேண்டும். மின்கசிவு தீயை அணைக்க தண்ணீரை பயன்படுத்தினால், மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். தீயணைப்பு கருவிகள் ஏதும் இல்லாத அரசு பள்ளிகளில், எவ்வித தீ விபத்து ஏற்பட்டாலும் தண்ணீர், மணலை வாரி இறைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.இதனால், மின்கசிவு, எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டால், ஆரம்ப நிலையிலேயே தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் தீத்தடுப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பெரும் விபத்துகளுக்கு பின், உத்தரவிடுவதைவிட, அனைத்து பள்ளிகளிலும் தீத்தடுப்பு கருவிகள் அமைத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி