உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குமரன் ரோட்டரி நிர்வாகிகள் பதவி ஏற்பு

குமரன் ரோட்டரி நிர்வாகிகள் பதவி ஏற்பு

திருப்பூர் : திருப்பூர் குமரன் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.புதிய தலைவராக மணி, செயலாளராக பத்மநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்றனர். இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கருவம் பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, சான்றிதழ் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மகளிருக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நகை பொம்மைகள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டன. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வாங்க நன்கொடை அளிக்கப்பட்டது. நலத்திட்ட உதவியை ரோட்டரி மாவட்ட முன்னாள் கவர்னர் சகாதேவன் வழங்கினார். குமரன் ரோட்டரி கிளப் பட்டய தலைவர் ரத்தினசபாபதி தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரலேகா, உதவி கவர்னர் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ