உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்கள் குறை கேட்பு கூட்டம் ரத்து

மக்கள் குறை கேட்பு கூட்டம் ரத்து

திருப்பூர் :தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் மதிவணன் அறிக்கை: தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது; பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் மற்றும் மனுநீதி நாள் முகாம் போன்றவை நடத்தக்கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.வாரம்தோறும் நடக்கும் பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் மற்றும் மனு நீதி நாள் கூட்டம் ஆகியன தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நாள் வரை நடைபெறாது, என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !