உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோடு இருந்தும் பயனில்லை; 10 கி.மீ., சுற்றிச்செல்லும் மக்கள்

ரோடு இருந்தும் பயனில்லை; 10 கி.மீ., சுற்றிச்செல்லும் மக்கள்

திருப்பூர்: திருப்பூரில் 750 மீட்டர் தூரமுள்ள ரோட்டை மீட்டெடுக்காததால், பத்து கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் சுற்றிச் செல்லும் அவல நிலை தொடர்கிறது.

திருப்பூர் வளம் பாலத்தில் இருந்து செல்லும் ரோடு வழியாக சத்யா நகர், மணியகாரம்பாளையம், காசிபாளையம், முதலிபாளையம், சிட்கோ மற்றும் ஊத்துக்குளி ரோடு செல்லும் வகையில் கோம்பை தோட்டம் பகுதியில் 40 அடி அகலமுள்ள ரோடு உள்ளது. போக்குவரத்துக்கு பயன்படாதவகையில் ரோடு முழுவதும் முட்புதர்கள் முளைத்தும், சாக்கடை கழிவு நீர் தேங்கியும் காணப்படுகிறது. ரோட்டின் மறுபகுதி சத்யா நகரில் இருந்து ஏற்கனவே ரோடு உள்ள நிலையில், வளம் பாலம் ரோட்டை இணைக்கும் 750 மீட்டர் நீளமுள்ள ரோடு மட்டும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளன. பயன்படுத்த முடியாத நிலையில் முட்புதர்களாக ரோடு உள்ளதால், சத்யா நகர், மணியகாரம்பாளையம், காசிபாளையம், முதலிபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், காங்கயம் ரோடு, புதூர் பிரிவு வழியாக 10 கிலோ மீட்டார் தூரம் சுற்றிச்செல்லும் அவல நிலை உள்ளது. ரோட்டை மக்கள் பயன்படுத்தும் வகையில் முட்புதர்களை அகற்றி, சங்கிலி பள்ளம் ஓடையின் குறுக்கே சிறிய கல்வெட்டு பாலம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்; இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு செல்ல எளிதாக இருக்கும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பகுதியில் ரோடு அமைத்தால் மாற்று போக்குவரத்து வழித்தடமாக மாறும் வாய்ப்புள்ளது. சுற்றிச் செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும்போது, காங்கயம் ரோட்டிலும் போக்குவரத்து நெரிசல் குறையும் என பல ஆண்டுகளாக இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், இந்த ரோடு மீட்டெடுக்கப்பட்டு தார் ரோடு அமைக்கப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன், உறுதிமொழி கொடுக்கப்பட்டது; இதுவரை ரோடு அமைக்கப்படவில்லை. நகரின் மத்தியில் வீணாக உள்ள அந்த ரோட்டை சீரமைக்கவும், மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தார் ரோடு அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ