உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடையூறாக பிளக்ஸ் போர்டுகள்

இடையூறாக பிளக்ஸ் போர்டுகள்

மடத்துக்குளம் : மடத்துக்குளத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வைக்கப்பட்டுள்ள 'பிளக்ஸ்' போர்டுகளை அகற்ற பேரூராட்சியினர் நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மடத்துக்குளம் தாலுகா தலைமையிடமாக அறிவிக்கப்பட்ட பின் அரசியல் கட்சிகளின் முக்கிய நிகழ்ச்சிகள் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடத்தப்படுகின்றன. அருகிலுள்ள கிராம மக்கள் பல்வேறு காரணங்களுக்காக மடத்துக்குளத்துக்கு வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் நடத்தப்படும் பல்வேறு பொது நிகழ்ச்சி மற்றும் அரசியல் கட்சி விழாக்களுக்கு பேனர்கள் வைக்கப்படுகின்றன. மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, நால்ரோடு பகுதி, பஸ்ஸ்டாண்டில் மற்றும் முக்கிய பகுதிகளில் பெரிய அளவுகளில் வைக்கப்படும் 'பிளக்ஸ்' போர்டுகள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதுடன் விபத்துக்கள் நடக்கும் அபாயமும் உள்ளது. இவற்றால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது: டூ வீலர் நிறுத்துவதற்கும், கனரக வாகனங்கள் விலகி செல்ல வழியில்லாமலும் வைக்கப்டும் பிளக்ஸ்களால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக உள்ள 'பிளக்ஸ்'களை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ