உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகளுக்கு அறிவுரை

விவசாயிகளுக்கு அறிவுரை

திருப்பூர் : விதை வாங்கும் போது, விதையின் முழு விவரங்களையும் அறிந்து வாங்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் பொன்னுசாமி அறிக்கை:தற்போது பருவ மழை பெய்ய துவங்கி உள்ளதால், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் காய்கறி விதைகளை விற்பனை நிலையங்களில் வாங்குகின்றனர். விதை வாங்கும் போது விதை கொள்கலன் மீது விதையின் விவரம் குறித்து விவர அட்டை, அட்டை எண், பயிர், ரகம், குவியல் எண், விதை பரிசோதனை நாள், விதை காலாவதி நாள், முளைப்புத்திறன், புறதூய்மை, இனத்தூய்மை, எடை, விற்பனை விலை, உற்பத்தி பயிர் விபரம், பயிரிட ஏற்ற பகுதி மற்றும் பருவம் குறித்த விவரங்கள் அச்சிடப்பட்டிருப்பதை கவனித்து விதைகள் வாங்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ