உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாய்ப்பால் தானம் வழங்க 120 தாய்மார்கள் சம்மதம்

தாய்ப்பால் தானம் வழங்க 120 தாய்மார்கள் சம்மதம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், கடந்த, 1ம் தேதி முதல், 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பாலுாட்டும் தாய்மார்கள் மத்தியில் தாய்ப்பால் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 120 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்க விருப்பம் தெரிவித்தனர்.அவிநாசி கிழக்கு ரோட்டரி உதவியுடன், முதல்கட்டமாக, 40 தாய்மார்களிடமிருந்து, 2 லிட்டர் தாய்ப்பால் தானம் பெறப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பாலுாட்டும் மேலாண்மை மையத்துக்கு வழங்கப்பட்டது.தாய்ப்பால் வாரம் நிறைவு விழா, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். தாய்ப்பால் தானம் வழங்கிய 25 தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி