உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாரண சாரணியர் சிறப்பு முகாம் 170 மாணவர்கள் பங்கேற்பு

சாரண சாரணியர் சிறப்பு முகாம் 170 மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதி பள்ளி சாரண சாரணியர்களுக்கான, ஆளுநர் விருதுக்கான பயிற்சி முகாம் நடந்தது.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, பள்ளி சாரண சாரணியர்களுக்கான, ஆளுநர் விருதுக்கான பயிற்சி தேர்வு முகாம், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இரண்டு நாட்கள் நடந்தது.தேர்வு முகாமை, குரல் குட்டை ஊராட்சித்தலைவர் ஆனந்தவேனி துவக்கி வைத்தார்.முகாமில், மலையாண்டிபட்டினம், சோழமாதேவி, உடுமலை சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளிகள், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரிய பாப்பனுாத்து அன்னை அபிராமி மெட்ரிக் பள்ளி, உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 90 மாணவர்கள், 80 மாணவியர் பங்கேற்றனர்.பயிற்சியின் ஒரு பகுதியாக, கவர்னர் விருதுக்கு தயாராவதற்கான வழிமுறைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.முகாமிற்கான பயிற்சி மற்றும் தேர்வுகளை, சாரண ஆசிரியர்கள் காளீஸ்வரராஜ், திலகராஜ், பாலாமணி, ரேணுகாதேவி மற்றும் ஆசிரியர்களும், ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் உடுமலை சாரண இயக்கத்தின் பொருளாளர் சதீஷ்குமார், செயலாளர் மோகன்தாஸ்கரம்சந்த் காந்தி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை