உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில் மோதியதில் 2 தொழிலாளர் பலி

ரயில் மோதியதில் 2 தொழிலாளர் பலி

திருப்பூர்;திருப்பூர், காலேஜ் ரோடு, சலவைபட்டறை அருகே ரயில்வே தண்டவாளத்தில் அதிகாலை, இரு வாலிபர் இறந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், திருவாரூரை சேர்ந்த ராஜ்குமார், 28, சரவணபவா, 27 என் பது தெரிந்தது.இருவரும் திருப்பூர், காவிலிபாளையம் புதுாரில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தது தெரிந்தது. இருவரும் டீக்கடைக்கு வந்து டீ குடித்து விட்டு, இயற்கை உபாதையை கழிக்க, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ