உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.2,000 லஞ்சம் வாங்கிய ஊழியருக்கு 3 ஆண்டு

ரூ.2,000 லஞ்சம் வாங்கிய ஊழியருக்கு 3 ஆண்டு

திருப்பூர்:திருப்பூர், காலேஜ் ரோடு, சலவைபட்டறை, ஜீவா நகரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சுகந்தி. வேலம்பாளையத்தில் பள்ளி ஒன்றில் சமையலராக வேலை செய்தார். கடந்த, 2014ல் அவர் உடல் நலம் சரியில்லாமல் இறந்தார். இதனால், 2015ல், சுகந்திக்கு குடும்ப நல நிதியாக, 1.50 லட்சம் ரூபாய் பெற கணவர் முத்து, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சத்துணவு பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.விண்ணப்பம் உயர் அதிகாரிகளுக்கு செல்ல, அப்போது பணியில் இருந்த சுகுணா, 62, என்பவர், 2,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார். திருப்பூர் மாவட்ட லஞ்சம் ஒழிப்பு போலீசார், சுகுணா லஞ்சம் வாங்கிய போது கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை, திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. சுகுணாவுக்கு, மூன்று ஆண்டு சிறை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து முதன்மை மாஜிஸ்திரேட் செல்லத்துரை தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை