உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய 4 பேர் சிக்கினர்

திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய 4 பேர் சிக்கினர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா, விற்கப்படுகிறதா என்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, மேட்டுப்பாளையத்தில் சாராயம் காய்ச்சப்படுவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், சோதனை செய்தனர். வாய்க்கால்மேட்டு புதுார், சி.பி., நகரை சேர்ந்த மனோஜ், 30, என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவது குறித்து தெரிந்து, மனோஜ், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குட்டிமுருகன், 44, செல்வராஜ், 53, அருண்குமார், 35, என, நான்கு பேரை கைது செய்தனர்.வீட்டில் வைக்கப்பட்டிருந்த, 7 லிட்டர் சாராயம், 60 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். அப்பகுதியில் பல மாதங்களாக இவர்கள் காய்ச்சி, தெரிந்த நபர்களுக்கு மட்டும் கொடுத்து வந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ