உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 451 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

451 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

திருப்பூர்;திருப்பூர், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள பூம்புகார் குந்தைகள் மையத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்குப்பின் கலெக்டர் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் 1,303 முதன்மை மையங்கள்; 169 குறுமையங்கள் என, மொத்தம் 1472 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. 2 முதல் 6 வயது வரையிலான 28 ஆயிரத்து 552 குழந்தைகள் முன்பருவக்கல்வி பயின்றுவருகின்றனர்.மாவட்டத்தில் பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 451 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 902 ஊட்டச்சத்து பெட்டகம்; மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 549 குந்தைகளின் தாய்மார்களுக்கு, 549 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. 6 மாதம் முதல் 6 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 2,438 குழந்தைகளுக்கும் ஆர்.யு.டி.எப்., உணவு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஐந்து வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும், கண் பாதிப்பை தடுக்கும் வைட்டமின் ஏ திரவம், இன்று (நேற்று), 2ம் தேதியும் (இன்று), வரும் 4ம் தேதியும் வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும், 6ம் தேதி வழங்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி