உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 451 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

451 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

உடுமலை:மாவட்டத்தில் பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 451 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 902 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர், கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 1,303 முதன்மை மையங்கள்; 169 குறுமையங்கள் என, மொத்தம் 1,472 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 451 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 902 ஊட்டச்சத்து பெட்டகம்; மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 549 குழந்தைகளின் தாய்மார்களுக்கு, 549 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ஐந்து வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும், கண் பாதிப்பை தடுக்கும் வைட்டமின் ஏ திரவம், நேற்றும், வரும் 4ம் தேதியும் வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும், 6ம் தேதி வழங்கப்படும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை