உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 155 மையத்தில் குரூப் 4 தேர்வு;  45,885 பேர் எழுதுகின்றனர்

155 மையத்தில் குரூப் 4 தேர்வு;  45,885 பேர் எழுதுகின்றனர்

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் நாளை, 155 மையங்களில், குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது; 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகின்றனர்.இளநிலை உதவியாளர், வி.ஏ.ஓ., டைப்பிஸ்ட், பில் கலெக்டர், வன காப்பாளர் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு, நாளை நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 45 ஆயிரத்து 885 பேர் தேர்வு எழுத உள்ளனர்.திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஒன்பது தாலுகாக்களில், குரூப் 4 தேர்வுக்காக, மொத்தம் 155 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தேர்வை கண்காணிப்பதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கருவூலத்திலிருந்து தேர்வு மையத்துக்கும் வினாத்தாள் எடுத்துச் செல்வது; தேர்வு முடிந்தபின் விடைத்தாளை கருவூலத்துக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்காக துணை தாசில்தார் நிலையிலான அதிகாரிகள் தலைமையில், 45 மொபைல் குழு அமைக்கப்பட்டுள்ளது.தேர்வில் முறைகேடுகளை கண்டறிந்து தடுப்பதற்காக, துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் அடங்கிய 18 பறக்கும்படை; மையத்துக்கு ஒருவர் வீதம் 155 கண்காணிப்பாளர்கள்; தேர்வு அறை கண்காணிப்பாளர் 2,295 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.தேர்வு பணிகளில் ஈடுபடும் வருவாய்த்துறையினருக்கான ஆலோசனை கூட்டம், டி.என்.பி.எஸ்.சி., அலுவலர் குமரேசன் தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.குரூப் 4 தேர்வுகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும். ஒரு அறையில், அதிகபட்சம் 20 தேர்வர்கள் அமரவைக்கப்படுவார்கள். தேர்வு எழுதுவோர், காலை, 9:00 மணிக்குள், தேர்வு மையத்துக்குள் சென்று விடவேண்டும். காலதாமதமாக வருவோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி