உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்க அனுமதி : கட்டண கொள்ளையை தடுப்பது மிக மிக அவசியம்

திருப்பூரில் 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்க அனுமதி : கட்டண கொள்ளையை தடுப்பது மிக மிக அவசியம்

திருப்பூர் : திருப்பூரில் 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. மிக குறைவான கட்டணத்தில் ஆட்டோவில் பயணிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில், அவற்றை வரைமுறைப் படுத்தி, பஸ் மற்றும் மினி பஸ் வசதி இல்லாத பகுதிகளுக்கு இயக்குவதோடு, உரிய வழித்தடம் அமைக்கவும், கட்டண கொள்ளை இல்லாமல் இயங்குவதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பனியன் தொழிலால் உலக அளவில் தனி இடத்தை பெற்ற திருப்பூர், மக்கள் தொகை வளர்ச்சியிலும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 27.20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திருப்பூரில், தற்போது ஐந்து லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, தினம் தினம் புதிதாக குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. வளர்ந்து வரும் திருப்பூரில் போதிய அளவு போக்குவரத்து வசதி இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது. 30 கிலோ மீட்டர் தூரம் வரை வளர்ந்துள்ள திருப்பூரில், பல ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்ட டவுன் பஸ்களே தற்போதும் இயங்கி வருகின்றன. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, டவுன் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால், தற்போது பிரதான ரோடுகளில் மட்டுமே டவுன் பஸ் கள் இயங்குகின்றன. ஒரு குடியிருப்புக்கு செல்ல மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். போக்குவரத்து வசதி குறைந்ததால், இரு சக்கர வாகன போக்குவரத்து அதிகரித்தது. போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. டவுன் பஸ்கள் செல்லாத பெரிய அளவிலான குடியிருப்புகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டதால் போக்கு வரத்து பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. இந்நிலையில், தற்போது 50 ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்திருப்பது மக்களுக்கு பயனுள்ள தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி பெற்று 720 ஆட்டோக்கள், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி பெற்று 183 ஆட்டோக்கள் என 903 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. ஆட்டோக்களில் பயணிக்க குறைந்த பட்சம் 30 ரூபாய் வசூலிப்பதால், ஏழை மக்கள் அதில் செல்ல யோசிக்கின்றனர். 50 ஆட்டோக்களில் முதல்கட்டமாக ஒன்பது ஷேர் ஆட்டோக் கள், நகரப் பகுதியில் ஓட ஆரம்பித்துள் ளன. முக்கிய ஸ்டாப்புகளில் நிறுத்தப் பட்டு, பயணிகளை கூவி, கூவி அழைக் கும் நிகழ்வு, திருப்பூரில் சாத்தியமாகியுள்ளது.முறைப்படுத்த வேண்டும்: கலெக்ஷனுக்காக, பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மட்டுமே ஷேர் ஆட்டோ இயக்கப்படும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் மத்தியிலும் ஷேர் ஆட்டோ நிற்கும் இடங்கள் குறித்து தெளிவான தகவல் சென்றடையவில்லை. ஒரே பகுதியில் அதிக ஆட்டோக்கள் ஓடும்போது, அவர்களுக்குள் பிரச்னை ஏற்படும். மேலும், போக்குவரத்து இல்லாத, நகரின் மற்ற பகுதி மக்களுக்கு பயன்படாத திட்டமாக மாறி விடும். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து ஷேர் ஆட்டோக்கள் இயக்குவதை முறைப் படுத்த வேண்டும். டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் செல்லாத பகுதி களுக்கு செல்லும் வகையில் வழித்தடங்கள் தயாரிக்க வேண்டும். அதன் அடிப்படையில், 50 ஆட்டோக்களையம் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் இயக்க வேண்டும். ஒருவருக்கு கலெக்ஷன் அதிகம் கிடைக்கும்; இன்னொருவருக்கு குறை வாக கிடைக்கும் என்ற பிரச்னை உருவாகாமல் இருக்க, சுழற்சி முறையில் ஷேர் ஆட்டோக்களுக்கு வழித்தடங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் திட்டமிடுவதோடு, அவர்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கட்டணத்தை கண்காணிப்பது அவசியம்: ஷேர் ஆட்டோக்களுக்கு, ஒரு கிலோ மீட்டர் ஒரு ரூபாய் என அரசு கட்டணம் நிர்ணயித்திருந்தாலும், தற்போதைய டீசல் விலை மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக கட்டுபடியாகாது என டிரைவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, ஷேர் ஆட்டோக்களில் எங்கு ஏறினாலும், இறங்கினாலும் ஐந்து ரூபாய் வசூலிக் கப்படுகிறது. இத்தொகை அதிகரிக்கா மல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விதி மீறும் ஷேர் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் இயக்கப்படுமா? திருப்பூரில் அதிகமானோர் வெளிமாவட்ட மக்களாக இருப்பதால், இரவு நேரங்களில் சொந்த ஊருக்கு சென்று, வருகின்றனர். அந்நேரங்களில் டவுன் பஸ்கள் இல்லாததால், அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இரவு நேரங்களில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை