உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம்

திருப்பூர்;கிராமப்புறத்தில், 250 கோழிகள் வளர்க்கும்சிறிய அளவிலான, நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, 50 சதவீதம் மானியம் அதாவது, ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 875 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகள் நிறுவ தேவையான பண்ணை கட்டுமான செலவு, உபகரணங்கள் மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான செலவுகளுக்காக, 50 சதவீத மானியம் வழங்கப்படும். திட்டத்துக்கான பங்களிப்பை வங்கி மூலமாகவோ, சொந்த நிதி ஆதாரம் மூலமாகவோ பயனாளிகள் செலுத்தலாம்.பயனாளி, கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பராக இருக்க வேண்டும்; விதைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள், மேலும் விவரம் அறிய அருகே உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை