உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 51 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

51 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், அடையாள அட்டைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.கண், நரம்பியல், எலும்புமுறிவு, மனநல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிசோதித்து, அடடையாள அட்டைக்கு பரிந்துரைத்தனர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், புதிதாக 40 மாற்றுத்திறனாளிகளுக்கும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த்ராம்குமார், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.---திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் பதிவு முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை