உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 6 காலம் ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் பக்தர்கள் குவிந்தனர்

6 காலம் ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் பக்தர்கள் குவிந்தனர்

திருப்பூர், ஜூன் 10-திருப்பூர் ெஷரீப் காலனி வாய்க்கால் தோட்டம், ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.திருப்பூர் ெஷரீப் காலனி, வாய்க்கால் தோட்டம் பகுதியில், 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டப அறக்கட்டளைக்குச் சொந்தமான ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மூலவர் சன்னதி கோபுரம் முழுமையாக தங்க முலாம் பூசி சீரமைக்கப்பட்டுள்ளது. நீரூற்று விநாயகர், கன்னிமூல கணபதி, சுப்ரமணியர் சன்னதி ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளது.கும்பாபிேஷக விழா கடந்த 6ம் தேதி காலை விநாயகர் வழிபாடு மற்றும் கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் ேஹாமம் ஆகியன நடந்தது. மாலை முளைப்பாலிகை ஊர்வலம் மற்றும் திருவாபரண ஊர்வலம் நடந்தது.கடந்த 7ம் தேதி காலை தனபூஜை, கோ பூஜை, மகாலட்சுமி ேஹாமம்; மாலை 5:00 மணிக்கு முளைப்பாலிகை, காப்பு கட்டு நிகழ்ச்சியும் அதையடுத்து, முதல்கால யாக சாலை பூஜைகளும் நடந்தது.நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜையும், கோபுர கலச ஸ்தாபிதமும் நடந்தது. தொடர்ந்து, அஷ்டபந்தனம், மூன்றாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி ஆகியன நடந்தன.நேற்று காலை கோவில் மஹா கும்பாபிேஷக விழா அதிகாலை 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு மற்றும் நான்காம் கால யாக பூஜைகளுடன் துவங்கியது. யாக சாலையிலிருந்து தீர்த்தக் குடங்கள் புறப்பட்டு, ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் தங்க விமான கோபுர கும்பாபிேஷகம் நடந்தது. பரிவாரமூர்த்திகள் சன்னதிகளில் கும்பாபிேஷகம் நடந்தது. கோபுர கலசங்கள் மீது புனித தீர்த்தம் ஊற்றி, தீபாராதனை நடந்தது.இதையடுத்து சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிேஷகத்தை அவிநாசி சிவஞான சிவாச்சாரியார், சங்கர நாராயண சிவாச்சாரியார், ராஜலிங்க சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை திருமண மண்டப அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில், அறக்கட்டளை மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.----திருப்பூர், ெஷரீப் காலனி, வாய்க்கால் தோட்டம் பகுதியில் உள்ள ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது. கோபுர கலசத்துக்குப் புனித நீர் ஊற்றப்படுகிறது.பக்திப்பரவசம் பொங்க பங்கேற்ற பக்தர்கள்.

'டிரோன்' மூலம் பக்தர்களுக்கு புனித தீர்த்தம்

கும்பாபிேஷகம் முடிந்ததும், டிரோன் மூலம் பக்தர்களுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. ராமசாமி முத்தம்மாள் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ