உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குமரன் கல்லுாரிக்கு உதவிக்கரம்

குமரன் கல்லுாரிக்கு உதவிக்கரம்

திருப்பூர்;திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், 2200 மாணவியர் படிக்கின்றனர். இக்கல்லுாரிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்துதர, ஸ்ரீபுரம் அறக்கட்டளை உதவிக்கரம் நீட்டியுள்ளது.அறக்கட்டளை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், குமரன் கல்லுாரிக்கு, 3.15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் சண்முகம், பொருளாளர் கந்தசாமி, செயலாளர் காண்டீபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராஜாசண்முகம் ஆகியோர் நிதியுதவி வழங்கினர். குமரன் கல்லுாரி முதல்வர் வசந்தி, நிர்வாக அலுவலர் நிர்மல் ராஜ் ஆகியோர் பெற்று கொண்டனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை