உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீகுருசர்வா மாணவியர் சாதனை

ஸ்ரீகுருசர்வா மாணவியர் சாதனை

திருப்பூர்:கடந்த மே மாதம் நடந்த சிஏ இன்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் ஸ்ரீகுருசர்வா சிஏ அகாடமி மாணவர்கள் இரண்டு குரூப்புகளிலும் முதல் முயற்சியில், 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவி தேவி நட்டார் 600க்கு 396, மலர்விழி - 395, கிரேஸ் மரியா - 394, ஸ்ரீத்திகா - 369 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர் ரவி பிரசாத், கெட்டிச்செவியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்தாண்டு மே மாதம் நடந்த தேர்வில், இந்நிறுவனத்தில் பயின்ற மாணவர் ராஜேஷ், 800க்கு 626 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் 23 வது இடம் பிடித்தார். காஸ்ட் அன்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங் பாடத்தில் ஜெயக்குமார் மற்றும் விஷ்ணு பாண்டி ஆகியோர், 200க்கு 97 மற்றும் 100க்கு 96 மதிப்பெண்ணும் பெற்றனர்.சிஏ பவுண்டேசன் தேர்வில் கடந்த, 10 ஆண்டாக மாவட்ட அளவில் இந்நிறுவனம் முதலிடம் பெற்று வருகிறது. தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் மாதிரி தேர்வுகள் நடத்துவது மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தனிக்கவனம் செலுத்தப்படுவது சாதனைகளுக்கு அடித்தளமாக உள்ளது என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். விவரங்களுக்கு 96009 22888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை