உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விதிமீறிய 11 மருந்துக்கடை மீது நடவடிக்கை

விதிமீறிய 11 மருந்துக்கடை மீது நடவடிக்கை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில், விதிமீறலில் ஈடுபட்ட 11 மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சட்ட ஒழுங்கு பராமரிப்பு குறித்த மாதாந்திர கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், போலீஸ் எஸ்.பி., அபிஷேக் குப்தா, டி.ஆர்.ஓ., ஜெய்பீம், சப்கலெக்டர் சவுமியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும், வலி நிவாரணி, துாக்க மாத்திரை, மனநலம் சம்பந்தப்பட்ட மாத்திரைகளை, டாக்டரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யப்படுகிறதா என, தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில், விதிமீறல் கண்டறியப்பட்ட 11 மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தவறுகள் கண்டறியப்பட்ட 6 மருந்துக்கடை களின் விற்பனை உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதிக விதிமீறலில் ஈடுபட்ட 5 மருந்துக்கடைகளின், மருந்து விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.சமூக விரோதிகள் சிலர், ஆன்லைனில் ஆர்டர் செய்து, வெளிமாநிலங்களிலிருந்து மருந்து கொள்முதல் செய்து, போதைக்கு பயன்படுத்துகின்றனர்; அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !