உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கல்லுாரியில் கலந்தாய்வு: 237 மாணவர்கள் சேர்க்கை

அரசு கல்லுாரியில் கலந்தாய்வு: 237 மாணவர்கள் சேர்க்கை

உடுமலை;உடுமலை அரசு கல்லுாரியில், இளநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 237 மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர்.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2024 - 25ம் ஆண்டுக்காக, இளநிலை பாடப்பிரிவுகளிலுள்ள, 864 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதற்கட்ட பொது கலந்தாய்வு நேற்று நடந்தது.மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியலில், ஒன்று முதல், 2 ஆயிரம் வரை இடங்களை பெற்றிருந்த மாணவர்கள், இக்கலந்தாய்வில் பங்கேற்றனர்.இதில், வேதியியல் பாடப்பிரிவில், 10 மாணவர்களும், தாவரவியல் - 1, கணிதவியல் - 10, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 14, அரசியல் அறிவியல் - 13, புள்ளியியல் - 5, பொருளியல் - 7, பி.காம்., - 51, பி.காம்., (சி.ஏ.,) - 71, பி.காம்., ( இ.காம்.,) 24, பி.பி.ஏ., பாடப்பிரிவில் 31 மாணவர்களும் என மொத்தம், 237 மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்தனர்.இன்று, தரவரிசை பட்டியலில், 2,001முதல், 4,000 வரையிலான இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.மாணவர் சேர்க்கைக்காக கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், பெற்றோருடன், 10 ஆம் வகுப்பு, பிளஸ் -1 , பிளஸ் - 2, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ் , மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் மூன்று நகல்கள் உடன் பங்கேற்க வேண்டும்.மேலும், உரிய கல்விக்கட்டணம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல் , மாணவரின் தரவரிசை இடம் பெற்ற கல்லுாரி இணையதளப்பக்கத்தின் நகல் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.மேலும், விபரங்களுக்கு கல்லுாரியின் இணையதளத்தை பார்கவும் என, கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை