உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருப்பூர்;கள்ளச்சாராய பலிக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, திருப்பூரில் அ.தி.மு.க., சார்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் குமரன் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ.,க்கள் ராதாகிருஷ்ணன், ஆனந்தன், மகேந்திரன், விஜயகுமார், அமைப்பு செயலாளர் சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,கள் பரமசிவம், நடராஜன், நடராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கட்சி நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட விபரீதம் குறித்தும், கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்தும் பேசினர். கள்ளச்சாராய பலிகளுக்கு பொறுப்பேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, கோஷமிட்டனர்.மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுந்தராம்பாள் உட்பட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !