உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:குற்றவியல் சட்ட திருத்தங்களை எதிர்த்து திருப்பூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் பெயர் மாற்றம், சட்ட திருத்தம் ஆகியவற்றை அமல்படுத்தியுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் இந்த சட்ட திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 'இண்டியா கூட்டணி வக்கீல்கள்' என்ற அமைப்பு பெயரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதே போல் தாராபுரத்தில் கோர்ட் வளாகம் முன்புறம் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நேற்று ஐந்தாம் நாளாக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறு தேதிகளில் ஒத்தி வைக்கப்பட்டது.வக்கீல்கள் கோர்ட் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இருப்பினும், நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர்.---திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய வக்கீல்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Krishna Gurumoorthy
ஜூலை 06, 2024 00:20

ஐந்து நாட்கள் கோட்டை புறக்கணித்த வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் உறுப்பினர் அந்தஸ்தை ஏன் ரத்து செய்ய கூடாது????


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை