உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வக்கீல்கள் போராட்டம் ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

வக்கீல்கள் போராட்டம் ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

திருப்பூர்:'தமிழகத்தில் துாண்டி விடப்படும் வக்கீல்கள் போராட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இவ்விஷயத்தில் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:நாடு முழுதும் முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு கடந்த, 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்டு, சட்ட வல்லுனர்களின் கருத்துரைகளை பெற்று, லோக்சபாவில் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, பின் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூட, இந்த, மூன்று சட்டங்களும் நாட்டில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என வரவேற்பு தெரிவித்துள்ளார். இச்சூழலில், இப்புதிய, மூன்று சட்டங்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தில் கடந்த, 1ம் தேதி முதல், வக்கீல்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டங்களுக்கு ஆதரவாக தி.மு.க., - அ.தி.மு.க., - கம்யூ., கட்சிகளும் போராட்டம் நடத்தி, வக்கீல்களின் போராட்டத்தை பின்னால் இருந்து துாண்டி வருகின்றனர்.இந்த புதிய சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் மட்டுமே இதுபோன்ற தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களை காப்பாற்றும் வல்லமை, நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.தமிழகத்தில் உள்ள வக்கீல்கள், ஒரு சில அரசியல் கட்சிகளின் சுயநலத்துக்கு பலியாகாமல், நாடு முழுதும் ஏற்கப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை ஏற்று, அதற்கு ஏற்ப தயாராகி பணிக்கு திரும்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ