உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை ஆசாமிகளால் பாதிப்பு; போலீஸ், நகராட்சி கமிஷனரிடம் மனு

போதை ஆசாமிகளால் பாதிப்பு; போலீஸ், நகராட்சி கமிஷனரிடம் மனு

உடுமலை : உடுமலை நகராட்சி அண்ணா பூங்கா, பழமையான பூங்காவாகும். இப்பகுதியில், கேந்திரிய வித்யாலயா, நகராட்சி மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, வேலைவாய்ப்புத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான தேர்வு மையம், நகராட்சி சந்தை மற்றும் ஏராளமான வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், அலுவலகங்கள் ஏராளமாக உள்ளன.அண்ணாபூங்கா அருகில்,ராஜேந்திரா ரோட்டிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. உடுமலை - மூணாறு செல்லும் பிரதான போக்குவரத்து ரோடாக உள்ள நிலையில், திறந்த வெளியில் 'குடி'மகன்கள் மது அருந்தி வருகின்றனர்.அண்ணா பூங்கா பராமரிப்பு பணி, பல ஆண்டுகளாக இழுபறியாகி வரும் நிலையில், அதனை திறந்த வெளி மதுக்கூடமாக மாற்றியுள்ளனர். ரோடுகளில் அரை நிர்வாணமாகவும், மது அருந்திவிட்டு, ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.மது பாட்டில்களை உடைத்து,ராஜேந்திரா ரோடு மற்றும் பார்க் ரோட்டில், தகராறு செய்வதோடு, பாட்டில்களை உடைத்து, பள்ளி வளாகம், ரோடுகளில் வீசி வருகின்றனர்.இதனால், பார்க் ரோடு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், போதை ஆசாமிகளால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.எனவே, பள்ளி, மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள மதுக்கடையை மாற்றவும், ரோடு, பள்ளி, பூங்கா ஆகியவை மது அருந்தும் மையமாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும், என கடை உரிமையாளர்கள், பெற்றோர் சார்பில், உடுமலை நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசாரிடம் மனு அளிக்கப்பபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை