| ADDED : ஜூன் 17, 2024 12:13 AM
திருப்பூர்;''ஏ.ஐ., புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தங்களை சேவையை உலக அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும்,'' என, பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் அகில இந்திய தலைவர் ரஞ்சீத்குமார் அகர்வால் பேசினார்.இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் அகில இந்திய தலைவர் ரஞ்சீத் குமார் அகர்வால், திருப்பூர் கிளைக்கு வந்தார். அதனையொட்டி நடந்த சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிக்கு, திருப்பூர் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.தென்னிந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் துணை தலைவர் ரேவதி ரகுநாதன், மத்திய குழு உறுப்பினர் ராஜேந்திரகுமார், தென்பிராந்திய உறுப்பினர்கள் ராஜேஸ் மற்றும் அருண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.அகில இந்திய தலைவர் ரஞ்சீத்குமார் அகர்வால் பேசியதாவது;'ஆர்பிஷியல் இன்டெலிஜென்ஸ்' எனப்படும் ஏ.ஐ., புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தங்களை சேவையை உலக அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.தற்போது தேர்ச்சி பெறும் பட்டய கணக்காளர்களில், மூன்றில் ஒருவர் பெண் என்ற அளவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சி.ஏ., பாடத்திட்டத்தில் மாற்றம் மற்றும் ஆண்டுக்கு மூன்று முறை தேர்வு திட்டம் ஆகியவற்றின் மூலம், அதிக மாணவர்கள் பயன்பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.திருப்பூர் கிளை செயலாளர் தருண் நன்றி கூறினார்.