உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுத்திகரிப்பு இயந்திரத்தில் குடிநீருக்கு பதில் காற்று

சுத்திகரிப்பு இயந்திரத்தில் குடிநீருக்கு பதில் காற்று

பல்லடம்:பல்லடம் அரசு மருத்துவமனையில், தினசரி, 700க்கும் அதிகமான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்களின் நலன் கருதி, மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் இதை சரியாக பராமரிக்காததால், சமீப நாட்களாக, குடிநீருக்கு பதில் இதில் காற்று மட்டுமே வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சுத்தமான சுகாதாரமான குடிநீர் அவசியம். தனியார் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் பராமரிக்க வேண்டும். ஆனால், நோயாளிகள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் இதுபோன்ற உபகரணங்களை முறையாக பராமரித்து பொதுமக்களுக்கு பயன்பட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ