உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழகம் முழுதும் கூட்டுறவு துறை குறைகேட்பு நாள்

தமிழகம் முழுதும் கூட்டுறவு துறை குறைகேட்பு நாள்

திருப்பூர்:கூட்டுறவு துறை ஊழியர்களிடம் பணியின் போதும், பணி தொடர்பாகவும், வேறு வகையிலும் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், பணியாளர் நாள் என்ற நிகழ்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, மாதந்தோறும், இரண்டாவது வெள்ளிக்கிழமை மண்டல அளவில் இதை நடத்த வேண்டும். அவ்வகையில், முதல் நிகழ்ச்சி, வரும், 12ம் தேதி, மண்டல இணைப்பதிவாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஆகியோர் தலைமையில் நடத்த வேண்டும்.அனைத்து வசதியும் கொண்ட இடத்தில் உரிய அறிவிப்புடன் நடத்த வேண்டும். இதற்கான போர்ட்டலில் குறைகள் குறித்த விண்ணப்பம் பெற்று, பதிவேற்றம் செய்து, உரிய விதிகளின் கீழ் உடனடியாக தீர்வு காண வேண்டும். நிராகரிப்பு எனில் உரிய விளக்கம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு நடைமுறை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி