உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்வெழுதியவர், தேர்ச்சி சதவீதம் குறைவு ஆனாலும், திருப்பூர் பெற்றது முதலிடம்

தேர்வெழுதியவர், தேர்ச்சி சதவீதம் குறைவு ஆனாலும், திருப்பூர் பெற்றது முதலிடம்

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் முந்தைய ஆண்டை விட தேர்வெழுதியவர், தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்த போதும்,மாநிலத்தில் முதலிடம் சாத்தியமாகியுள்ளது.கடந்த, 2023 ம் ஆண்டு, 11 ஆயிரத்து, 295 மாணவர்கள், 13 ஆயிரத்து, 437 மாணவியர் எனமொத்தம், 24 ஆயிரத்து, 732 பேர் தேர்வெழுதினர். நடப்பாண்டு கடந்தாண்டை விட, 485 மாணவர் குறைவாக, 10 ஆயிரத்து, 810 பேரும், 398 மாணவியர் குறைவாக, 13 ஆயிரத்து 39 பேரும் தேர்வெழுதினர்.இதனால், கடந்தாண்டை விட, 883 பேர் குறைவாக தேர்வெழுதியுள்ளனர். தேர்வெழுதியவர் குறைவு என்பதால், 507 மாணவர், 436 மாணவியர் என, 1,573 பேர் முந்தைய ஆண்டை விட குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம், மாணவர், 96.92, மாணவியர், 98.52 ஆக இருந்தது. மொத்த தேர்ச்சி சதவீதம், 97.79 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு மாணவர், 0.34 சதவீதம் குறைந்து, 96.58. மாணவியர், 0.34 சதவீதம் குறைந்து, 98.18 சதவீதம் பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம், 0.3 சதவீதம் குறைந்து, 97.45 ஆக குறைந்துள்ளது.நடப்பாண்டு தேர்வெழுதியவர், தேர்ச்சி சதவீதமும் குறைந்த போதும், திருப்பூர் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதித்து காட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை