உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியுடன் இணைப்பதா; ஊராட்சி மக்கள் திடீர் தர்ணா

மாநகராட்சியுடன் இணைப்பதா; ஊராட்சி மக்கள் திடீர் தர்ணா

பல்லடம்:மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்லடம் அருகே, பொதுமக்கள் 'தர்ணா' போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சி விரிவாக்கத்துக்காக, எல்லையில் உள்ள சில ஊராட்சிகளை இணைக்க உத்தேசப் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பொதுமக்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

கருத்து கேட்க வேண்டும்

அவர்கள் கூறியதாவது: கடந்த 1995ல் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, 1,200 குடும்பங்களுக்கு மாற்று இடமாக இங்கு ஒதுக்கப்பட்டது. இன்று வரை எங்களுக்கு முறையாக பட்டா கூட வழங்கப்படவில்லை.அன்றிலிருந்து ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் வசித்து வரும் எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இன்று வரை செய்து தரப்படவில்லை. ஊருக்குள் பஸ்கள் வருவதில்லை; சரியான ரோடு, சாக்கடை, மின் வசதிகள் கிடையாது.தற்போது, திடீரென மாநகராட்சியுடன் இப்பகுதியை இணைப்பதாக பேச்சு எழுகிறது. அவ்வாறு இணைத்தால், நுாற்றுக்கணக்கில் வரி செலுத்தி வரும் நாங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மக்களிடம் கருத்து கேட்கப்படாமல், எந்தவித தகவலும் தெரிவிக்காமல், திடீரென முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். இது நீடித்தால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அதிகாரிகள்உறுதிமொழி

முன்னதாக, பி.டி.ஓ., மனோகரன், ஒன்றிய சேர்மன் தேன்மொழி, ஊராட்சித் தலைவர் பாரதி சின்னப்பன், இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.'இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும்' என்று அதிகாரிகள் உறுதி அளித் ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை