உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு தொகுப்பு வீடு கூரை இடிந்து முதியவர் காயம்

அரசு தொகுப்பு வீடு கூரை இடிந்து முதியவர் காயம்

திருப்பூர் : திருப்பூர் அடுத்த குளத்துப்பாளையம், ஏ.டி., காலனியை சேர்ந்தவர் கர்ணன், 60. இருபது ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட அரசு தொகுப்பு வீட்டில் மனைவியுடன் வசிக்கிறார். உடல்நலமின்றி கர்ணன் வீட்டில் இருந்துவந்தார்.நேற்று முன்தினம் மாலை, இரண்டு மணி நேரம் செய்த கன மழையில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. கர்ணன் லேசான காயத்துடன் இடிபாடுகளில் சிக்கிகொண்டார். அவரை பொதுக்கள் மீட்டனர். ஊத்துக்குளி தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்துறையினர் சென்று விசாரித்தனர். எஸ்.பெரியபாளையம் ஊராட்சி தலைவர் சின்னசாமி, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை