உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்தனுார் அம்மன் பொங்கல் விழா

அத்தனுார் அம்மன் பொங்கல் விழா

அவிநாசி அடுத்த சுதந்திரநல்லுாரில் உள்ள ஸ்ரீ அத்தனுார் அம்மன் கோவிலில் பொங்கல் விழா, கடந்த 3ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 6ம் தேதி இளநீர் காவடி, தீபாராதனை ஆகியவை நடந்தன. நேற்று நடந்த பொங்கல் விழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை