உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாரச்சந்தையில் 2வது வாரமாக ஏலதாரர் - வியாபாரிகள் மோதல்

வாரச்சந்தையில் 2வது வாரமாக ஏலதாரர் - வியாபாரிகள் மோதல்

அவிநாசி, : அவிநாசி பேரூராட்சி வாரச்சந்தையில், ஏலதாரர் - வியாபாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது.அவிநாசி பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை, கைகாட்டிப்புதுார் அருகே செயல்படுகிறது. வாரந்தோறும் புதன்கிழமை கூடும் சந்தையில், 250 வியாபாரிகள் கடை விரிக்கின்றனர்.சுங்க ஏலத்தை கார்த்திகேயன் என்பவர் எடுத்துள்ளார். 10 அடி அகலம், 8 அடி நீளம் கொண்ட கடைக்கு, 40 ரூபாயும், அதற்கு மேல் அதிகளவில் அமைக்கும் கடைகளுக்கு, 70 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. கடந்த வார சந்தையில், ஏலதாரர் கார்த்திகேயனின் மனைவி ஜெயலட்சுமி, சந்தையில் சுங்க வசூல் செய்தார். அப்போது, பள்ளிபாளையத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவர் குறிப்பிட்ட அளவை தாண்டி கூடுதலான இடத்தில் கடை விரித்ததாக கூறி, ஜெயலட்சுமி, அதற்குரிய பணம் கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், பழனியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் தன்னைத் தாக்கியதாக ஜெயலட்சுமி அவிநாசி போலீசில் புகார் அளித்தார். நேற்று கூடிய சந்தையில், பழனியம்மாள் கடை வைக்கக்கூடாது என, கார்த்திகேயன் தடுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதையறிந்த, பேரூராட்சி கவுன்சிலர்கள், மற்ற வியாபாரிகள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். -----

பிரச்னைக்குரிய நபர் மீண்டும் கடை அமைக்க வந்ததால் அவரை மட்டும் கடை வைக்க வேண்டாம் என கூறினோம்.

- கார்த்திகேயன், ஏலதாரர், அவிநாசி வாரச்சந்தைஇதற்கு முன் கடை ஒன்றுக்கு 20 - 30 ரூபாய் வரை வசூல் செய்தனர். மின்விளக்கு, 'சிசிடிவி' பொருத்தப்பட்டுள்ளது என்று கூறி, சிறிய கடைகளுக்கு, 100 ரூபாய் முதல் பெரிய கடைகளுக்கு 150 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் துளியும் கண்டு கொள்வதில்லை. ஆனால், சந்தை வளாகத்தில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.- வியாபாரிகள், அவிநாசி வாரச்சந்தை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை