உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் இருப்பு

விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் இருப்பு

உடுமலை, ; நடப்பாண்டு குளிர்கால மழை, இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது. மேலும், விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 618.20 மி.மீ., ஆகும். நடப்பாண்டு, ஜன.,- பிப்., மாத குளிர் கால மழையளவு சராசரி, 14 மி.மீ., ஆகும். நடப்பாண்டு, இரு மாதங்களில், 14.76 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியை விட, 0.76 மி.மீ., மழை கூடுதலாக கிடைத்துள்ளது.பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானிய விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. மாவட்டத்தில், நெல் 9.90 டன், தானிய பயிறுகள், 29.52 டன், பயறு வகை பயிறுகள் 9.79 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள், 29.63 டன் இருப்பு உள்ளது.மேலும், பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் போதியளவு இருப்பு உள்ளது.தற்போது, யூரியா 3 ஆயிரம் டன், டி.ஏ.பி., 1, 339 டன், காம்ப்ளக்ஸ் உரம், 3 ஆயிரத்து, 806 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 697 டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது, என மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை