உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆவணி அவிட்டம் விழா; பூணுால் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டம் விழா; பூணுால் மாற்றும் நிகழ்ச்சி

திருப்பூர்:ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, திருப்பூர் பகுதியை சேர்ந்த, 'ரிக்' மற்றும் 'யஜூர்' வேதத்தை பின்பற்றுவோர் நேற்று பூணுால் மாற்றிக்கொண்டனர்.திருப்பூர், சபாபதிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்தது; பண்டித ஸ்ரீசேஷகிரி ஆச்சாரியார் தலைமையில், ஆவணி அவிட்ட விழா, வேதமந்திரங்கள் முழங்க நடந்தது. வேத ஆகமங்களை பின்பற்றி, முதலில் ரிக் வேதத்தை பின்பற்றுபவர்களும், அடுத்ததாக யஜூர் வேதத்தை பின்பற்றுவோரும் பூணுால் மாற்றிக்கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவின் போதும், சாம வேதத்தை பின்பற்றுவர் பூணுால் மாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டது.l திருப்பூர், ஓடக்காடு, ராமகிருஷ்ண பஜனை மடத்தில், ஆவணி அவிட்டம் பண்டிகை சிறப்பாக நடந்தது. ஸ்ரீனிவாச சர்மா உபாத்யாயத்தில், ரிக் மற்றும் யஜூர் வேதத்தை சேர்ந்தவர்கள், வேதமந்திரங்களை ஓதி, தங்கள் வேத ஆரம்பத்தை துவக்கினர்.l அவிநாசி - மங்கலம் ரோட்டில் குருக்ருபா சேவா அறக்கட்டளை சார்பில், சுப்பையா சுவாமி மடத்தில் பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.முன்னதாக ஆனந்த ராம சுப்பிரமணியம் குருக்கள் தலைமையில், ரிஷி தர்ப்பணம், மூதாதையர் தர்ப்பணம் மற்றும் வேதாரம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.l மொண்டிபாளையம் லட்சுமிஹயக்ரீவர் கோவிலில், சேஷகிரி ஆச்சார் தலைமையில் பூணுால் மற்றும் நிகழ்ச்சி நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருக் கல்யாண மண்ட பத்திலும் பூணுால் மாற்றும் வைபவம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ