உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏ.வி.பி., பள்ளியில் ரத்த தான முகாம்

ஏ.வி.பி., பள்ளியில் ரத்த தான முகாம்

திருப்பூர் : திருப்பூர், திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., பள்ளியில், இன்டரேக்ட் கிளப், ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன், ஐ.எம்.ஏ., ரத்த வங்கி இணைந்து பள்ளி வளாகத்தில் இம்முகாமை நடத்தின.ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் தலைவர் பழனிசாமி, முகாமை துவக்கி வைத்தார். ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன், தலைமை வகித்து, ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக, போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், மாவட்ட ரத்ததான முகாம் தலைவர் கமலா பாஸ்கர், ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர் பேசினர்.ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிரியாராஜா, மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட திட்ட தலைவர் அனந்த்ராம், ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் செயலாளர் ரவிசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்டரேக்ட் கிளப் தலைவர் மாணவி சோபியா சார்லஸ் நன்றி கூறினார்.முகாமில், 120 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ