உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர் : உலக நுரையீரல் புற்றுநோய் தினம் முன்னிட்டு, கல்லுாரி மாணவியர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில் உள்ள தீரன் சின்னமலை மகளிர் கல்லுாரி சார்பில், உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்ஸி பிலிப் தலைமை வகித்தார். நுண்ணுயிரியல் துறை தலைவர் செல்வ ஜெயந்தி வரவேற்றார். உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் ஆதித்யா மனோ பிரசித்தா, ஆடை வடிவமைப்பு துறைத்தலைவர் வாணிஸ்ரீ ஆகியோர் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்னை மற்றும் இழப்பு குறித்து நாடகம் மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தினர்.விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லுாரி வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் வஞ்சிபாளையம் பஸ் ஸ்டாப் வரை நடந்தது. பங்கேற்ற மாணவியர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். உடற்கல்வித்துறை இயக்குநர் ஸ்ரீபிரியங்கா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை