உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலுாட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாலுாட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உடுமலை: உடுமலை இன்னர் வீல் சங்கத்தின் சார்பில், பாப்பான்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான இந்நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம், கருப்பை புற்றுநோய் பரிசோதனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு பழங்கள், பாதாம், முந்திரி உள்ளிட்ட பருப்பு வகைகள் வழங்கப்பட்டன. பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.உடுமலை ரயில்வே ஸ்டேஷன், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பெண்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.சங்கத்தலைவர் டாக்டர் ரமாதேவி, செயலாளர் கோதைநாயகி, பொருளாளர் ரேணுகாலட்சுமி மற்றும் உறுப்பினர்கள், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் ேஹமலதா, சுபப்ரியா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி