திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில், வடக்கு குறுமைய மாணவியர், ஒற்றையர், இரட்டையர் பேட்மின்டன் போட்டி நேற்று நடந்தது. அதில், ஒற்றையர் பேட்மின்டன், 14 மற்றும் 19 வயது பிரிவில், ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் பள்ளி முதலிடம்; 17 வயது பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம்; 14, 17, 19 வயது பிரிவில் முறையே கொங்கு வேளாளர் மெட்ரிக், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி, இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக், 2வது இடம் பெற்றன.இரட்டையர் பேட்மின்டன் போட்டி, 14 வயது பிரிவில், கொங்கு வேளாளர் பள்ளி முதலிடம், ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக், 2வது இடம்; 17 வயது பிரிவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி, 2வது இடம்; 19 வயது பிரிவில், ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் முதலிடம், கொங்கு வேளாளர் மெட்ரிக், 2வது இடம்.மாணவியர் பால் பேட்மின்டன், 17 மற்றும் 19 வயது பிரிவில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், 17 வயது பிரிவில், கொங்கு மெட்ரிக், 19 வயது பிரிவில் ஜெய்சாரதா மெட்ரிக், 2வது இடம். 14 வயது பிரிவில், ஜெய்சாரதா மெட்ரிக் முதலிடம், ஜெய்வாபாய் பள்ளி, 2வது இடம்.பத்தொன்பது வயது மாணவியர் கூடைப்பந்து, ஜெய்வாபாய் பள்ளி; 17 மற்றும் 14 வயது பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம்; 14 வயது பிரிவில் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி; 17 வயது பிரிவில், ஏ.பி.எஸ்., மெட்ரிக் பள்ளி; 19 வயது பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி இரண்டாவது இடம்.திருப்பூர், கணியாம்பூண்டி, மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர் கால்பந்து போட்டி நடந்தது. அதில், 14 வயது மற்றும் 19 வயது பிரிவில், மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் முதலிடம், ஏ.வி.பி., டிரஸ்ட், 2வது இடம்; 17 வயது பிரிவில் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் முதலிடம், மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக், 2வது இடம் பெற்றன.