உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குலைதள்ளிய வாழைகள்; மின் ஊழியர்கள் வெட்டியதாக புகார்

குலைதள்ளிய வாழைகள்; மின் ஊழியர்கள் வெட்டியதாக புகார்

அவிநாசி; அவிநாசி அருகே 200க்கும் மேற்பட்ட குலைதள்ளிய வாழைகளை மின் வாரியத்தினர் தன் அனுமதியின்றி வெட்டியதாக விவசாயி புகார் தெரிவித்துள்ளார்.அவிநாசி தாலுகா, சின்னேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கருக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். விவசாயி. தனது 10 ஏக்கர் நிலத்தில் 3500க்கும் மேற்பட்ட கலப்பின ஜிண்டால் ரக நேந்திரன் வாழை பயிரிட்டு இருந்தார். இன்னும் 20 நாளில் வெட்டுவதற்கு தயாராக குலைதள்ளிய நிலையில் இருந்த 200க்கும் மேற்பட்ட வாழைகளை, உயரழுத்த மின் கம்பியில் உரசுவதாக கூறி மின் வாரியத்தினர் வெட்டியதாக பாலச்சந்தர் புகார் கூறுகிறார்.ரூ.2 லட்சம் நஷ்டம்அவர் கூறுகையில், ''பல்வேறு இயற்கை மற்றும் நோய் தாக்குதல்களிலிருந்து பராமரித்து மகசூல் தரும் நிலையில் குலை தள்ளியிருந்த வாழை மரங்களை வெட்டியது கண்டனத்துக்குரியது. தோப்பில் யாரும் இல்லாதபோது, இந்தச் செயலை செய்துள்ளனர். 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்றார்.

சீரான மின்வினியோகம் இல்லை

கடந்த இரு மாதமாக நடந்த மின் தடை பராமரிப்பு சமயங்களில், உயர் அழுத்த மின் கம்பியில் உரசும் வாழை மர இலைகளை வெட்ட வேண்டும் என்று பாலச்சந்தருக்கு முறையாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கருக்கம்பாளையம், சின்னேரிபாளையம், செம்மாண்டம் பாளையம் ஆகிய பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் பாலச்சந்தர் தோப்பு வழியாக வரும் உயர் அழுத்த மின் கம்பிகள் மற்றும் வீட்டு உபயோக இணைப்புகளுக்கு செல்லும் குறைந்த அளவு மின் கம்பிகளும் வாழை இலைகள், கிளைகள் பட்டு அடிக்கடி மின் மாற்றியில் பழுது ஏற்படுவதாகவும், சீரான மின்வினியோகம் இல்லாமல் விவசாய மின் மோட்டார், தெரு விளக்குகள் உள்ளிட்டவை பழுது ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இதனால், உயரமாக வளர்ந்து உயரழுத்த மின்கம்பியில் உரசி செல்லும் இலைகளை மட்டுமே வெட்டி உள்ளோம்.- செந்தில்குமார், மின் வாரிய செயற்பொறியாளர், அவிநாசி மேற்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை