உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லாரி மீது கார் மோதல்; பனியன் ஊழியர் பலி

லாரி மீது கார் மோதல்; பனியன் ஊழியர் பலி

திருப்பூர்;வீரபாண்டி பிரிவை சேர்ந்தவர்கள் சவுந்தர், 32, ரித்திஷ், 20, சிவானந்தன், 33, கோகுல் சபரி, 33, அக்தர் சிஷக், 23. ஐந்து பேரும், பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளவில், ஐந்து பேரும், காங்கயத்தில் இருந்து, கோவை நோக்கி காரில் சென்றனர். காரை ரத்தீஷ் ஓட்டி சென்றார்.காங்கயம், கோவை ரோட்டில் சென்ற போது நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. சவுந்தர் பரிதாபமாக இறந்தார். மற்ற, நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை