உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் சங்க பொதுக்குழு கூட்டம்

பனியன் சங்க பொதுக்குழு கூட்டம்

திருப்பூர்:ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொதுக்குழு, இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்தது. துணை தலைவர் ரவி தலைமை வகித்தார். பொதுசெயலாளர் சேகர், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர்.பனியன் தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவரும், சம்பளம், பஞ்சப்படி, இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்ட விவரங்களுடன், சம்பள சிலிப் வழங்கப்பட வேண்டும்.வீட்டு வசதி கேட்டு விண்ணப்பித்துள்ள தொழிலாளர்களுக்கு, காலம் கடத்தாமல், அரசு வீடு ஒதுக்கித்தர வேண்டும். தேவையான அளவு வீடுகள் கட்ட, மத்திய அரசிடம் நிதியை கேட்டுப்பெற வேண்டும்.திருப்பூர் மாவட்ட அளவில், 18 ஆயிரத்துக்கும் அதிகமான, சிறிய 'செக் ஷன்'கள் இயங்கி வருகின்றன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். உள்நாட்டு விற்பனைக்கான பனியன் ஆடைகள் உற்பத்தியில், பெரும் பங்கு வகித்து வருகின்றனர்.இவ்வகை தொழிலாளருக்கு எவ்வித சட்ட பாதுகாப்பும் இல்லை. வேலை அளிப்பவர்கள், போனஸ், இ.எஸ்.ஐ., - பி.எப்., சேவை அளிக்க கடமைப்பட்டவர்கள். தொழிலாளர் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி, தொழிலாளர்களுக்கான சட்டப்பூர்வமான சேவைகளும், சலுகைகளும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !