சிக்னல் பழுதுதிருப்பூர், பூலுவபட்டி சிக்னல் பழுதாகி ஒரு மாதமாகிறது. தினசரி போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது. சிக்னல் பழுதை சரிசெய்ய வேண்டும்.- மனோகரன், பூலுவபட்டி.விபத்து அபாயம்அவிநாசி, பழங்கரை பஸ் ஸ்டாப் அருகே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை வி.ஐ.பி., வருகையின் போது அகற்றப்பட்டது; மீண்டும் அமைக்காததால் விபத்து அபாயம் நிலவுகிறது.- ஹரி, பழங்கரை.சரிசெய்யலாமே!திருப்பூர் வடக்கு உழவர் சந்தை பின்புற வீதியில் உள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் உடைந்து மூன்று மாதமாகிறது. பலமுறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி சரிசெய்யவே இல்லை. குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.- உமாசங்கர், எஸ்.வி., காலனி. (படம் உண்டு)மழைநீர் தேக்கம்திருப்பூர், காட்டுவளவு, ஆர்.வி.இ., லே-அவுட், ரேஷன் கடை முன் மழை பெய்யும் போதெல்லாம், மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும்.- மோகன்குமார், காட்டுவளவு. (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு, அண்ணா நெசவாளர் காலனியில் குழாய் உடைந்து, அவ்வப்போது சாலை முழுதும் தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகும் முன், குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- மனோகரன், அண்ணா நெசவாளர் காலனி. (படம் உண்டு)திருப்பூர், 30வது வார்டு, லட்சுமிநகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சரிசெய்ய வேண்டும்.- முத்துக்குமார், லட்சுமிநகர். (படம் உண்டு)திருப்பூர், ஸ்டேட் பாங்க் காலனி, இரண்டாவது வீதி, பி.வி.எஸ்., அபார்மென்ட் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- சுப்ரமணியம், ஸ்டேட் பாங்க் காலனி. (படம் உண்டு)கழிவுநீர் தேக்கம்திருப்பூர், கணியாம்பூண்டி - காவிலிபாளையம் சாலையில் கழிவுநீர் தேக்கம் தொடர்கதையாக உள்ளது. வாகனங்கள், பாதசாரிகள் சென்று வர முடியவில்லை.- சக்திவேலு, கணியாம்பூண்டி. (படம் உண்டு)நடுரோட்டில் குழிதிருப்பூர், அரண்மனை புதுார் பள்ளி அருகே, நடுரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- அங்குராஜ், அரண்மனைப்புதுார். (படம் உண்டு)உடைந்த பலகைதிருப்பூர், காதர்பேட்டை, சின்னா நகரில் தெரு குறித்து வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை உடைந்து கீழே விழுந்து விட்டது.- வின்சென்ட்ராஜ், ராயபுரம். (படம் உண்டு)ரியாக் ஷன் குப்பை மாயம்கரைப்புதுார் ஊராட்சி, மீனாம்பாறையில் குப்பை வழிநெடுக தேங்கி, சுகாதாரக்கேடாக இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது, குப்பைகள் அகற்றப்பட்டு விட்டது.- செல்வராஜ், மீனாம்பாறை. (படம் உண்டு)இருள் நீங்கியதுதிருப்பூர், கோல்டன் நகர் - கருணாகரபுரி ரோடு, நாராயணபுரம் முதல் வீதியில் தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்திருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, விளக்குகள் சரிசெய்யப்பட்டுள்ளது.- பால்பாண்டி. நாராயணபுரம். (படம் உண்டு)