உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலி மது விற்பனை: அண்ணன், தங்கை கைது

போலி மது விற்பனை: அண்ணன், தங்கை கைது

அவிநாசி;அவிநாசி அருகே போலி மதுபானங்கள் பதுக்கி சட்ட விரோதமாக விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தங்கையை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கருக்கங்காட்டுப்புதுார் பகுதியை சேர்ந்த கருப்புசாமி, 60 மற்றும் இவரது தங்கை பாப்பா, 48. இருவரும் போலி மதுவை பதுக்கி சட்ட விரோதமாக விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து, எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் இருவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய நச்சு கலந்த, 7 போலி மது பாட்டில்களை கைப்பற்றினர். இருவரையும் கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை