உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:கொல்கத்தா மருத்துவ மாணவி சம்பவத்தைக் கண்டித்து பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேற்கு வங்க மாநிலம், கோல்கத்தாவில், மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்தும், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு ஆகிய சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பி.எஸ்.என்.எல்., அலுவலக வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தை விஸ்வநாதன் துவக்கி வைத்தார். கிளை செயலாளர் அருண்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் அண்ணாதுரை, சுப்ரமணியம், ஜாபர், லிடியா கிறிஸ்டி உள்ளிட்டோர் பேசினர். மாலதி நன்றி கூறினார். இதில், பங்கேற்ற ஊழியர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். ---கொல்கத்தாவில், மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை